ஒரத்தநாடு, மார்ச். 23: ஒரத்தநாடு அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 51 ஆயிரம் ரூபாய் பணத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை தஞ்சை பட்டுக்கோட்டை பிரதான சாலை பாப்பநாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அவர்களது காரில் 51 ஆயிரம் ரூபாய் பணம் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. அந்த பணத்தினை பறிமுதல் செய்து ஒரத்தநாடு தேர்தல் பிரிவில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் தனி வட்டாட்சியர் பிரேமாவதியிடம் ஒப்படைத்தனர்.
