மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா?

மன்னார்குடி, மார்ச் 23: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலவாசல், காரக்கோட்டை, காரிக் கோட்டை, எடையர் எம்பேத்தி, செருமங் கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் டிவி அனுபமா ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க எதுவாக 307 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  அவற்றில் 20 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக டிவி அனுபமா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், நேற்று மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட மேலவாசல், காரக்கோட்டை, காரிக்கோட்டை, எடையர் எம்பேத்தி, செருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா, வாக்காளர்களுக்கு குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தள நடைபாதை, சக்கர நாற்காலி, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நக்கீரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

Related Stories: