வாலிபரை சரமாரியாக தாக்கியவருக்கு வலை

நெல்லை, மார்ச் 23: பரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (19). இவர் சம்பவத்தன்று பாளை விஎம் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐ அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேட்டையைச் சேர்ந்த பிரான்சிஸ் பினோ (19) என்பவர் முன்விரோதம் காரணமாக சரண்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த பெருமாள்புரம் போலீசார், தாக்குதல் நடத்திய பிரான்சிஸ் பினோவை தேடி வருகின்றனர்.

 

Related Stories: