பலாமரத்தில் அதிகளவில் காய்த்த பலா முசுகள்

கந்தர்வகோட்டை, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி அதிக அளவில் கிராமங்கள் சூழ்ந்த பகுதி இங்கு உள்ள விவசாயிகள் அனைவரும் அவரவர் தோட்டத்திலும், வீடுகளிலும் பலாமரம் வைத்து பாராமரித்து வருகிறார்கள். தற்சமயம் பலா மரங்கள் காய்க்க தொடங்கி உள்ளன. மரங்களில் பலா முசுகள் அதிக அளவில் இருப்பதால் மரத்தில் உரிமையாளர்கள் பலாபழம் பெருக்க பலா முசுகளை வெட்டி குறைந்து வருகிறார்கள்.

இவ்வாறு வெட்டப்படும் பலா முசுகள் உணவுகளில் பயன்படுத்தி வருகின்றனர். பலா முசுகளின் பட்டைகளை சீவி விட்டு கூட்டு, பொரியல், குழம்பு வைத்து சாப்பிட்டும் வருகிறார்கள். மரத்தில் பலா முசுகளை கலைந்து விட்டால் தான் பலாபழங்கள் பெரிய அளவில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். தற்சமயம் பலா முசுகள் அதிக அளவில் கடைகளுக்கு விற்பனைக்கு வருவதால் விலை மிகவும் குறைந்து உள்ளது. மேலும் பலா முசு மேல் உள்ள பிரியம் குறையும் அளவிற்கு காய்ப்பு அதிக அளவில் உள்ளது என்விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: