அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்கள் தெரிவிக்கலாம்

அரியலூர், மார்ச் 23: தேர்தல் விதிமுறை மீறல் குறித்த புகார்களை தேர்தல் பொதுப்பார்வையாளர் செல்நம்பரில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால், எதிர்வரும் 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளராக பிரியங்கா சிங்லா, நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அரியலூர் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் நடத்தை விதிகள் மீறல்கள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் அளித்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்களை 6385165646 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது ariyalurac149@gmail.com < mailto:ariyalurac149@gmail.com > என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார்களை அளிக்கலாம்.

மேலும், அரியலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள கூட்டரங்கில் தினசரி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Stories: