பூம்புகார் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் நியமனம்

தரங்கம்பாடி, மார்ச் 23: பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நர்சிங்குமார் கல்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 162.பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக இந்திய தேர்தல் ஆணையம், நர்சிங்குமார் கல்கோ, ஐ.ஆர்.எஸ். என்பவரை நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளரை 7395988810 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும்,மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: