வைத்தீஸ்வரன்கோயில் பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூஜை விழா

சீர்காழி, மார்ச் 23: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் மேல்நிலைப்ப பள்ளியில் புதிய ஆய்வகம் கட்ட பூமிபூஜை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் முதன்மை கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆய்வகங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக்குழு தலைவர் ராஜேஷ், பள்ளி செயலர் பாஸ்கரன், மாருதி பில்டர்ஸ் பொறியாளர் அகோரம், பள்ளி முதல்வர் .ஜெகதீஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: