ஆட்டோவில் பேட்டரி திருடிய போதை நபர் கைது

தர்மபுரி, மார்ச் 23: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வெற்றிலைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு(35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம், காரிமங்கலம் தேர் நிலையம் அருகில் வாடகைக்காக ஆட்டோவை நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, போதை நபர் ஒருவர், சுற்றிலும் ஆள்நடமாட்டத்தை கவனித்து விட்டு, ஆட்டோவில் இருந்த பேட்டரியை திருடியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த பிரபு பொதுமக்கள் உதவியுடன் மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்து காரிமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அவர் பென்னாகரம் திகிலோடு பகுதியை சேர்ந்த பழனிசாமி(43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து ரூ.7,500 மதிப்பிலான பேட்டரி பறிமுதல் செய்தனர்.

 

Related Stories: