தர்மபுரி, மார்ச் 23: தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் பிரதான சாகுபடி பயிராக உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் 1500 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு 2841 ஹெக்டேர் பரப்பளவிலும், மஞ்சள் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.
தர்மபுரி ஒன்றியத்தில் வத்தல்மலை, அன்னசாகரம், ஏ.கொல்லஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வேட்ராயன்கொட்டாய், மிட்டாரெட்டிஅள்ளி, தின்னஅள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி, சோலைக்கொட்டாய், லாலாகொட்டாய், வெள்ளோலை. செங்கல்மேடு, தூதைரயன்கொட்டாய், சவுக்குதோப்பு ஆகிய பகுதிகளில் பருவமழையை நம்பி மஞ்சள் சாகுபடி செய்து பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்துவிட்டனர். பின் தங்கி சாகுபடி செய்த விவசாயிகளின் மஞ்சள் பயிர் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தூதைரயன்கொட்டாய் மற்றும் சவுக்குதோப்பு ஆகிய பகுதிகளில் மஞ்சள் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
