சட்டமன்ற தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்

 

சிவகாசி, மார்ச் 23: சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், பல்வேறு பிரிண்டிங் தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் கட்டுமான பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அசாம், மேற்குவங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்.9ம் தேதியும், மேற்கு வங்க மாநிலத் தேர்தல் ஏப்.23 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதனால், அம்மாநில தொழிலாளர்கள் சிவகாசியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அசாம் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதேபோல மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அடுத்த மாதம் துவக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளார்கள்.

Related Stories: