பழநி மலைக்கோயிலில் உழவார பணி

 

பழநி, மார்ச் 23: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் திருப்பூரை சேர்ந்த கொங்கு பண்பாட்டு மைய அமைப்பின் சார்பில் நேற்று உழவார பணி நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற உழவார பணியில் மலைக்கோயில் படிப்பாதை, வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம், கிரிவீதி, மலைக்கோயில் வெளிப்பிரகார பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேங்கி கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், துணிகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.

Related Stories: