நிலக்கோட்டை, மார்ச் 23: செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆத்தூர், புதுக்கோடங்கிபட்டி, வீரசிக்கம்பட்டி, போடிகாமன்வாடி, வீரக்கல், சித்தையன்கோட்டை, காமுபிள்ளைசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அரசு அனுமதியின்றி மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக நெல்லூரை சேர்ந்த கார்த்திக் (35), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமார் (26) ஆகியோர் மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 149 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (39)ஐ தேடி வருகின்றனர்.
