திருவாரூர் மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ்

 

திருத்துறைப்பூண்டி,பிப்.10: திருவாரூர் மாவட்ட என்எஸ்எஸ் தொடர்பு அலுவலருக்கு பாராட்டு சான்றிதழை பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வழங்கினார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் பள்ளி இணைச்செயல்பாடுகளில் மேல்நிலைப்பள்ளிகளில் முதன்மையாக இருக்கக்கூடிய நாட்டு நலப்பணித்திட்டஅமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு மாவட்டம் தோறும் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு 2025-26ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்களும் அனைத்து திட்ட அலுவலர்களும் சிறப்பு முகாமினை செம்மையாக செய்திருந்ததற்காக பாராட்டி பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆலோசனையின்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் நாட்டு நலப்பணி திட்டம் சாந்தி, சீரிய முயற்சியால் 52 மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் 1953 திட்ட அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் டி ஷர்ட் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனால் வழங்கப்பட்டது.

Related Stories: