தஞ்சாவூர், பிப்.11: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கெதிரான உறுதிமொழி எற்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவிற்கிணங்க, திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரைகளின் படியும், கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுரைக்கிணங்க, தஞ்சாவூர் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில், அனைத்துதுறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து கொத்தடிமைத் தொழிலாளர் முறைக்கெதிரான உறுதிமொழி எற்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
