வேதாரண்யம், பிப்.11: வேதாரண்யத்தில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்த ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது. இல்லத்தரசிகள் கிலோ கணக்கில் தக்காளி வாங்கிச் சென்றனர். உணவில் சின்ன வெங்காயம் இல்லாத சாம்பார் இல்லை, அதேபோல் தக்காளி இல்லாத குழம்பும் இல்லை. சாம்பார், ரசம், உள்பட அசைவ உணவிலும் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. தக்காளி சீசனைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அதிக விளைச்சல் உள்ள காலங்களில் விலை மலிவாகவும், விளைச்சல் இல்லாத போது விலை உச்சத்தை தொடும். தக்காளியை வெங்காயம், உருளைக்கிழங்கு போல் நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்க முடியாது.
இதனால் இல்லத்தரசிகள் தேவைக்கேற்ப தினமும் கொஞ்சமாக தக்காளியை வாங்குவதுண்டு. வேதாரண்யம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற வாரம் தக்காளி கிலோ ரூபாய் 40 முதல் 60 வரை விற்பனையானது தற்போது திடீரென தக்காளி விலை குறை ந்து ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில மாதங்களுக்குமுன்பு தக்காளி கிலோ ரூபாய் 100வரை விற்பனையானது. மெல்ல மெல்ல விலை குறைந்து தொடர்ந்து 40 ரூபாய்க்கு விற்பனையானது.
