கடும் பனிப்பொழிவு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத வரம்பினை 19 சதவீதமாக உயர்த்த வேண்டும்

 

செம்பனார்கோயில், பிப்.11: மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1,71,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் செம்பனார்கோயில் அருகே காளகஸ்தினாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிசாமி, அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது நெல் கொள்முதல் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: