கீழையூர் இ.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம்

 

கீழ்வேளூர், பிப்.11: தாளடி நெல் பயிரை காப்பாற்ற மேட்டூரில் இருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி வரும் 14ம் தேதி மேலப்பிடாகையில் சாலை மறியல் நடத்துவது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜாஅலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம் பேசினார்.

கூட்டத்தில் தாளடி நெல் பயிரை காப்பாற்ற மேட்டூரில் இருந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி வரும் 14ம் தேதி மேலப்பிடாகையில் சாலை மறியல் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: