அறுவடை எந்திரத்தில் இருந்து விழுந்தவர் பலி

 

கறம்பக்குடி, பிப். 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அதிறான் விடுதி பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நெல் அறுவடையானது இப்பகுதியில் இயந்திரங்களின் உதவிகளுடன் நடைபெற்று வருகிறது. இதற்காக இயந்திரங்கள் வாடகைக்கு எடுத்துவரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை பணிக்காக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தாலுகா எளியத்தூர் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற டிரைவர் கதிர் அறுக்கும் இயந்திரத்தை அதிறான் விடுதி பகுதியில் உள்ள வயல்வெளிக்கு ஓட்டி வந்துள்ளார்.
அறுவடை பணி குறித்து திட்டமிட அவர் இயந்திரத்தின் மேலே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராத விதமாக வறி கீழே விழுந்துள்ளார்.

Related Stories: