லால்குடி, பிப்.11: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் 16 மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழிகாட்டுதலின்படி லால்குடி அருகே பூவாளூர் திருமூலநாதர் கோயில் சார்பாக மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் விழா திருமூலர் நாதர் கோயில் வளாகத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் புவனேஷ்வரி பால்ராஜ், செயல் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
