திருக்காட்டுப்பள்ளி, பிப்.11: லால்குடி வட்டம் குமுளூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மகன் சதீஷ்குமார்(39). இவர் தற்போது மைக்கேல்பட்டி அருளானந்த நகரில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மனைவி ஷர்மிளா தனது கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரிக்க திங்கள்கிழமை மாலை திருக்காட்டுப்பள்ளி காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் தண்டாயுதம் மற்றும் போலீஸார் மைக்கேல்பட்டி சென்றனர். இந்நிலையில் போலீஸார் முன்னிலையில் சதீஷ்குமார் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதனை தடுக்க முற்பட்ட சார்பு ஆய்வாளரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சதீஷ்குமார் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
