புதுக்கோட்டையில் சாலைமறியல் போராட்டம்

 

புதுக்கோட்டை, பிப். 11: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.

Related Stories: