100 ஆண்டுகள் பழமையான கோயில் மண்டபம் வாஸ்துப்படி அமைக்கப்படவில்லையா: ஐகோர்ட் கேள்வி

மதுரை: காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அறிக்கை தரும் வரை கோயிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. கோயிலின் சுற்றுச்சுவர் தனது சொத்துக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ளதாக வசந்தா, சண்முகவேல் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோயில் மண்டபம் வாஸ்துப்படி அமையவில்லை என்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 100 ஆண்டுகள் பழமையான கோயில் மண்டபம் வாஸ்துப்படி அமைக்கப்படவில்லையா என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

Related Stories: