விஜய் – சங்கீதா காதல் மலர்ந்தது எப்படி?

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் என்பவர் லண்டனுக்கு புலம்பெயர்ந்த தொழிலதிபர். அங்குதான் இன்றுவரை தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சங்கீதாவும் லண்டனில் தான் படித்து, வளர்ந்தார். 1996ல் விஜய் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தை பார்த்த பிறகு அவரின் தீவிர ரசிகையாக மாறிவிட்டார் சங்கீதா. லண்டனில் இருந்து ரசிகையாக விஜய்க்கு பலமுறை கடிதங்கள் அனுப்பி வந்தார் சங்கீதா. பதிலுக்கு விஜய்யும் அவருக்கு கடிதங்கள் அனுப்புவாராம்.

லண்டனுக்கு வரும்போது உங்களை சந்திக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு குடும்பத்துடன் ஒருமுறை வந்த சங்கீதா, விஜய்யின் சூட்டிங்கில் அவரை சந்தித்துள்ளார். அப்போது சங்கீதாவின் அழகில் மயங்கிய விஜய், அவரை ஒருதலையாக காதலிக்க தொடங்கியிருக்கிறார். பிறகு அடிக்கடி லண்டனுக்கு சென்று சங்கீதாவை பார்த்து வந்துள்ளார். அப்போது தனது காதலை விஜய் வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய்யின் அப்பா சந்திரசேகர், ஷோபா ஆகியோர் சங்கீதாவின் பெற்றோரிடம் என் மகனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சங்கீதாவும் காதலிப்பதாக விஜய்யிடம் கூறியுள்ளார். அதன்பின் இருவரும் காதலில் தீவிரமாக முழ்கியிருந்தனர். பிறகு சங்கீதாவும் விஜய்யை சந்திக்க அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளார். சென்னையில் சுற்றித் திரிந்தால் பொதுமக்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் விஜய், லண்டனுக்கு சென்று அங்கு சங்கீதாவுடன் தியேட்டர்களுக்கு செல்வது, ஷாப்பிங் செல்வது என காதலை வளர்த்து வந்துள்ளார். விஜய் தான் முதலில் திருமணம் செய்து கொள்ளலாமா என சங்கீதாவிடம் கேட்டுள்ளார்.

அவரும் சம்மதம் சொல்ல அவர்கள் காதலுக்கு குடும்பத்தினரும் பச்சை கொடி காட்டியுள்ளனர். லண்டனில் நிச்சயதார்த்தமும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் திருமணமும் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும் 2005ல் திவ்யா சாஷா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளுடன் அன்பாக இருந்து வந்துள்ளார் விஜய். தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மனைவி சங்கீதாவை அழைத்து செல்வார்.

மகன் சஞ்சய் கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது ‘சிக்மா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். மகள் திவ்யா தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில், 26 ஆண்டு திருமண வாழ்வுக்கு பிறகு விஜய்யிடம் இருந்து சங்கீதா விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு நடிகையால் பிரச்னை இருந்து வருவதாக தகவல் பரவி வந்தது.

அதன்காரணமாக, சங்கீதா தனது பிள்ளைகளுடன் லண்டனில் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். சினிமா தொடர்பான விஷயத்தில் கூட விஜய்யிடம் ஆலோசிக்காமல் சஞ்சய் விலகியே இருப்பதாக சொல்லப்படுகிறது. பி.எஸ்.சி.பயோ மெடிக்கல் சயின்ஸ் படித்துள்ள சங்கீதா அவரது தந்தையை போல பிஸ்னஸ் மைண்ட் கொண்டவராம். விஜய் தொடர்பான அனைத்து விழாக்களிலும் தவறாமல் பங்கேற்பார். விஜய் பங்கெடுக்க முடியாத திருமண விழாக்களில் சங்கீதா தலை காட்டி வந்தார்.

ஆனால் சமீப காலமாக எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் சங்கீதா கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார். விஜய் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்ததில் சங்கீதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்பகாலங்களில் விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதா ஆடை வடிவமைப்பில் உதவி செய்துள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும், குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்துள்ளார். விஜய்யின் வெற்றியில் சங்கீதாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

Related Stories: