பிற்படுத்தப்பட்டோர் விடுதி பணியாளர்களுக்கு விருது

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மற்றும் சிறந்த விடுதிகளை தெரிவு செய்து அதில் பணியாற்றும் விடுதி பணியாளர்கள் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 2024-25ம் ஆண்டில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய மூன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

இதை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மூன்று சமூகநீதி விடுதிகளை தெரிவு செய்து அதில் சிறப்பாக பணியாற்றிய காப்பாளர் / காப்பாளினிகள், சமையலர்கள், காவலர் / ஏவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை பெற்ற அலுவலர்கள் மற்றும் விடுதி பணியாளர்களுக்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சுரேஷ்குமார், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் கலையரசி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: