* யார் அந்த நடிகை?
விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த சங்கீதா, அந்த மனுவில் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு ஒரு நடிகையுடன் இருந்தது என குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்த பலரும் யார் அந்த நடிகை என பரபரப்பாக பேச ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்: அந்த மூன்றெழுத்து நடிகை, படிக்கும் காலத்திலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அவர் சென்னையை சேர்ந்தவர்தான். அந்த நடிகை மாடலிங்கில் ஈடுபடுவது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனாலும் நடிகையின் அம்மா, மகளின் ஆசைகளை நிறைவேற்றுவதில் குறியாக இருந்தார். எப்படியாவது தனது மகளை தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்திவிட வேண்டும் என விரும்பினார். அதற்காக மகளை அவர் தயார்படுத்தி வந்தார். மகளின் மாடலிங் புகைப்படங்களை பல தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மலையாள இயக்குனர் ஒருவர் தனது படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தார். இப்படித்தான் அந்த நடிகையின் சினிமா பிரவேசம் தொடங்கியது.
மகள் சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் நடிகையின் தந்தை தனியே பிரிந்து சென்றுவிட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக நடித்த சில படங்களிலேயே நடிகை பிரபலமாகிவிட்டார். தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் என இருக்கும் நடிகைகளுக்குத்தான் மவுசு இருக்கும் என்ற பிம்பத்தை இந்த மூன்றெழுத்து நடிகை உடைத்துக் காட்டினார். தனது அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை வளைத்துப்போட்டார். ஆரம்பத்தில் பல நடிகர்களுடன் இணைத்துப் பேசப்பட்ட இந்த நடிகை, விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
அப்போதே விஜய்க்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து தனது பல படங்களில் இந்த நடிகையுடன் சேர்ந்து விஜய் நடித்தார். இந்நிலையில் அந்த நடிகைக்கும் விஜய்க்கும் இடையே ஏதோ ஒரு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். பிறகு தனது படங்களில் அந்த நடிகைக்கு விஜய் வாய்ப்பு தருவதையும் நிறுத்திவிட்டார்.
இப்படியே காலங்கள் கடந்தோடியது. விஜய் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்திலிருந்து மேலும் உயர்ந்து ஸ்டார் நடிகராக வலம் வரத் தொடங்கினார். அப்போது இந்த நடிகையும் நம்பர் ஒன் அந்தஸ்தில் இருந்தார். அந்த சமயத்தில் திடீரென ஒரு பார்ட்டியில் இந்த நடிகையை சந்தித்துள்ளார் விஜய். அப்போது மீண்டும் இவர்கள் தங்களது நட்பை புதுப்பித்துக்கொண்டனர். அப்போது முதல் இருவரும் மீண்டும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
இது பற்றி சங்கீதாவுக்கு தெரியவந்ததும் அவர் விஜய்யின் கள்ளக்காதலை கண்டித்தார். ஆனால் விஜய் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக சில ஆண்டுகளுக்கு முன் வெளியான தனது படத்தில் அந்த நடிகையை விஜய் ஹீரோயினாக நடிக்க வைத்தார். அது மட்டுமின்றி, அந்த நடிகைக்கு மேலும் சில பெரிய படங்களில் நடிக்க வேறு சில ஹீரோக்களிடமும் விஜய் சிபாரிசு செய்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்து விரக்தி அடைந்த சங்கீதா, லண்டனுக்கு திரும்ப சென்று பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
* கெட்ட வார்த்தைகளால் திட்டினார்
என்னிடம் இருந்து விலகிய விஜய் 2021ம் ஆண்டு முதல், கெட்ட வார்த்தைகளால் திட்டினார். தனது செயல்களால் என்னை கைவிட்ட அவர் ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வாழும் நிலைக்கு என்னை தள்ளினார்.
* திருமண உறவை தொடர முடியாது
முற்றிலும் சிதைந்துள்ள திருமண உறவை இனி மீட்க இயலாது நிலை உள்ளது. தொடர் மன வேதனை, அவமானம் மற்றும் துன்பமாக மாறிய திருமண உறவில் இனியும் என்னால் தொடர முடியாது.
* திருமணத்தை மீறிய உறவு
நடிகையுடனான திருமணத்தை மீறிய உறவை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன், பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார்.
* அந்த நடிகையுடன் ஜாலி டூர்
விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடு பயணம் செய்து, பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்த நடிகையும் இந்த பயணங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த போட்டோக்களால் நானும் என் குழந்தைகளும் மிகுந்த அவமானத்துக்குள்ளானோம்.
* நடிகையால் பெரும் அவமானம்
அந்த நடிகையுடன் விஜய் வைத்திருந்த வெளிப்படையான தொடர்பு எனக்கு மனவேதனையையும், குழந்தைகளுக்கு அவர்களது நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.
* கள்ள உறவை கைவிடாத விஜய்
கடந்த ஏப்ரல் 2021ல், விஜய் ஒரு நடிகையுடன் கள்ள உறவில் இருப்பது எனக்கு தெரியவந்தது. திருமண பந்தத்தை மீறிய அவரது துரோக செயல் எனக்கு ஆழ்ந்த மன வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இது பற்றி விஜய்யிடம் கேட்டபோது, அந்த நடிகையுடனான கள்ள உறவை முறித்துக்கொள்வதாக உறுதி அளித்தார். ஆனால், வாக்குறுதியை மீறி அந்த உறவை அவர் கைவிடவில்லை. இது எனக்கு தீராத மனவேதனையை ஏற்படுத்தியது.
* மனரீதியாக புறக்கணித்தார்
என்னை உடல், மன ரீதியாக விஜய் புறக்கணிக்க தொடங்கினார். தாம்பத்திய உரிமையை மறுத்தார். தன்னுடைய சமூக மற்றும் திரைத்துறை வாழ்வில் இருந்து என்னை ஒதுக்கினார். வேண்டுமென்றே என்னிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
* விஜய்யை வெறுக்கும் மகன், மகள்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதை அறிந்து சங்கீதா மனதளவில் உடைந்து போனார். கடந்த சில ஆண்டுகளாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறார். இதன் காரணமாக, விஜய்யின் மகன் ேஜசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோரும் விஜய்யின் செயல்களை வெறுக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் இருவரும் அம்மாவுக்கு துணையாக இருந்து வருகின்றனர். இதனால்தான் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குனராக அறிமுகமானபோதும் அது பற்றி விஜய் வாய் திறக்கவில்லை. ஜேசனும் தந்தையை சென்று சந்தித்து வாழ்த்து கூட பெறவில்லை. அவர் தனது அம்மாவுக்கு துணையாக இருந்து வருகிறார். அதேபோல் திவ்யா சாஷாவும் அம்மா சங்கீதாவுடனே வசித்து வருகிறார்.
* சங்கீதா மீது அன்பு பொழியும் மாமியார், மாமனார்
விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அவரது மனைவி ஷோபா ஆகியோர் சாலிகிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் மருமகள் சங்கீதா மீது அளவுக்கடந்த பாசம் இருக்கிறது. காரணம், விஜய்யை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் சங்கீதா திறம்பட கவனித்து வந்திருக்கிறார். மாமியார், மாமனாரை தனது சொந்த அம்மா, அப்பா போல் பார்த்துக்கொண்டாராம்.
தந்தையுடன் சினிமா விவகாரங்களால் ஏற்பட்ட மோதலில் ஆரம்பத்தில் இருந்தே அவரை விஜய் ஒதுக்கி வந்தார். இதனால் தந்தை மகனிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு, மருமகள் படும் அவஸ்தைகளை பார்த்து சந்திரசேகரனும் ஷோபாவும் கண் கலங்கிப்போயிருக்கிறார்கள்.
நடிகையுடன் காதல் வேண்டாம் என விஜய்க்கு ஷோபா பலமுறை அறிவுரை கூறியிருக்கிறார். இதனால் அம்மா ஷோபாவுடன் பேசுவதையும் விஜய் தவிர்த்து வந்தாராம். தற்போது கட்சி ஆரம்பித்த ஒரே காரணத்தால் திடீரென பெற்றோரை சந்தித்து அவர்களுடன் நல்ல முறையில் இருப்பதுபோல் விஜய் காட்டிக்கொண்டிருக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
* வெளியில் செல்லக்கூட அனுமதி இல்லை
விஜய் தன்னுடைய தவறுக்காக வருந்துவதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக என் செலவுக்கு கொடுத்து வந்த பணத்தை குறைந்தார். மேலும், சுதந்திரமாக வெளியே சென்று வருவதை தடுத்தார்.
* 2024ல் கள்ளத்தொடர்பு வெளியே தெரிந்தது
2024ம் ஆண்டில் அந்த நடிகைக்கும், விஜய்க்கும் இடையேயான கள்ள தொடர்பு வெளிவரத்தொடங்கியது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பகிரப்பட்டன. இது எனக்கு இன்னும் அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது.
* அவமானத்துக்கு உள்ளானேன்
விஜய்யின் இந்த செயல்களால் நான் மேலும் அவமதிக்கப்பட்டேன். அவரது நடத்தைகள் பொருளாதார ஆதிக்கத்தையும், தான்தான் பெரிய ஆள் என்ற மனப்பான்மையையும் பிரதிபலித்தன
* பேசியும் விஜய் ஒத்துவரவில்லை
கடைசியாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி விஜய்யிடம் பேசினேன். ஆனால், அப்போதும், இருவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால், வேறு வழியின்றி இந்த விவகாரத்து மனுவை தாக்கல் செய்கிறேன்.
* நடிகைகளுடன் இணைத்து வெளியான கிசுகிசு
திரையுலகில் நடிக்க வந்த தனது ஆரம்பகாலத்தில், தனக்கு ஜோடியாக நடித்த சில நடிகைகளுடன் விஜய் டேட்டிங் செய்ததாகவும், சில நடிகைகளை காதலித்ததாகவும் தகவல் பரவியது. கடந்த 1990களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடித்த 4 எழுத்து நடிகையுடன் கிசுகிசு பரவியது. அவரைத்தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதுபோல், கடந்த 2001ல் வெளியான ஒரு தமிழ்ப் படத்தில் தன்னுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடிய 2 எழுத்து நடிகையை விஜய் ரகசியமாக காதலிப்பதாக தகவல் பரவியது. பிறகு அந்த நடிகை வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். தமிழில் 3 படங்களில் ஜோடியாக நடித்த கேரள நடிகை ஒருவருடன் விஜய் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த கிசுகிசு தற்போது வெளியாகும் 3 எழுத்து முன்னணி நடிகை வரை நீடித்து வருகிறது.
சென்னை இசிஆர் கடற்கரை பகுதியில், 3 எழுத்து முன்னணி நடிகைக்கு சொகுசு பங்களா ஒன்றை விஜய் வாங்கி கொடுத்துள்ளதாகவும், படப்பிடிப்பு இல்லாதபோது இருவரும் அங்கு சந்திப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னாள் ஹீரோயின் ஒருவரது மகளும், நடிகையுமான ஒருவருடன் கூட விஜய்யை இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது வதந்தி என்று பிறகு தெரிந்தது.
