234 சட்டமன்ற தொகுதிகளிலும் செயல் வீரர்கள் கூட்டம் தவெக அறிவிப்பு

சென்னை: தவெக வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ம் தேதி (1.3.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்துகலந்தாலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டில் அந்தந்தச் சட்டமன்ற தொகுதிகளின் பல்வேறு அணியினர், அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

Related Stories: