சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு: ‘‘ஒன்றிய பா.ஜ. அரசு குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக விசாரணை அமைப்புகளின் மாண்பை அடகு வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறிதேனும் வெட்கம் கொள்ளுங்கள். நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு எனது பாராட்டுகள்’’.
