சேலம்: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51) இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் தங்கியிருந்து ஹோமியோபதி மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விசாரணையில், வர்ஷினி, திருநெல்வேலி வி.கே.புரத்தை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையான தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால், தந்தை வரதராஜனே மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும், கொலை நடந்த பின் வரதராஜன், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கு செல்வதாக தனது தாய் மற்றும் மனைவி ஆகியோரிடம் கூறிவிட்டு, ரூ.10 ஆயிரத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.
வரதராஜன் புறப்படுவதற்கு முன்பு, சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் மொட்டை அடித்துள்ளார். அவரை பிடிக்க போலீசார் காசி விரைந்து உள்ள நிலையில், வரதராஜன் புகைப்படம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு அவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
