திருப்பரங்குன்றம் கோயில் சொத்தில் பிற மத நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

மதுரை:மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை, கோயிலுக்கு சொந்தமானது. மலையின் மீது மேற்பார்வை செய்வதிலிருந்து போலீசாரை உடனடியாக விலகிக் கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளின்படி மலையடிவாரம், பாதைகள், நெல்லித்தோப்பு, முன்புறம் மற்றும் பின்புற பாதை உட்பட மலையின் மீதுள்ள தனது சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்ட அவற்றை கோயில் தேவஸ்தானம் மீட்க வேண்டும். கோயில் சொத்தில் மூன்றாம் தரப்பினர் மதசார்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், புனித மரங்கள், கட்டிடங்கள், பாதைகள் மற்றும் இந்து பக்தர்களின் மத உரிமைகளை பாதுகாக்க தேவஸ்தானம் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

எந்த ஒரு நபர் அல்லது குழுவினரை மலைக்குச் செல்ல, ஊர்வலம் நடத்த அல்லது அல்லது பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. படிக்கட்டுகள், மலையடிவாரம் உள்ளிட்ட கோயிலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள போலீசார் அல்லது மாநில அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அவகாசம் கோரியதால் விசாரணை பிப். 4க்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா நிர்வாகம் சார்பில் மலையில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய மனு மீதான விசாரணையையும் பிப். 4க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: