164 ஆசிரியர்கள், 91 ஆசிரியரல்லா பணியாளர்கள் இடமாறுதலுக்கான ஆணைகள்: அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்வழங்கினார்

சென்னை: உயர்கல்வி துறையின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா அலுவலர்களின் நலன் கருதி, விருப்ப பணியிட மாறுதல் நடத்த அறிவுறுத்தப்பட்டு, கடந்த 24.12.2025 அன்று முதல் 05.01.2026 வரை இணைய வழியாக பொது கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 340 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், கல்லூரி கல்வி இயக்ககம், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககம் மற்றும் அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களிடமிருந்து 256 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில் தகுதிவாய்ந்த 164 ஆசிரியர்களுக்கும் மற்றும் 91 ஆசிரியரல்லா பணியாளர்களுக்கும் இடமாறுதலுக்கான ஆணைகளை சென்னை கல்லூரி கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு 112 அரசு கல்லூரிகளுக்கான ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணையையும், கல்லூரி முதல்வர்களிடம் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை செயலாளர் முனைவர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் கல்லூரி கல்வி இயக்கக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: