சென்னை: பிரதமர் மோடி மதுராந்தகம் வர உள்ள நிலையில், ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறக்கும் ஒத்திகை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வருகின்ற 23ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மதுராந்தகத்திற்கு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வரவுள்ளார். எனவே, பிரதமரின் வருகையை முன்னிட்டு, மதுராந்தகத்தில் தற்காலிகமாக 7 ஏக்கர் பரப்பளவில் ஹெலிகாப்டர் தரை இறங்கும் தளம் அமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. இதனை தொர்ந்து, 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மதுராந்தகம் நகரை வட்டமடித்தபடி விமானப்படை வீரர்கள் தரையிறக்கி ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.
