சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெற உள்ள தேஜ கூட்டணிதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மதியம் 2.15 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு மதுராந்தகம் வந்தடைகிறார். மதியம் 3 மணி முதல் 4.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார்.
சென்னை வரும் மோடியின் பயண திட்டம் வெளியீடு
- மோடி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேஜா கூட்டணி தேர்தல் பிரச்சார பேரணி
- மதுராந்தகம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- தமிழ்நாடு…
