கமுதி அருகே வாலிபரை தாக்கிய நான்கு பேர் கைது

கமுதி, டிச.15: கமுதி அருகே கத்தியால் வாலிபரை தாக்கி செல்போனை பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே அபிராமம் அடுத்த அந்தேரியந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர்(27). இவரை, கமுதி கண்ணார்பட்டி மதுபான கடையின் பின்புறத்தில் நேற்று நான்கு பேர் கத்தியால் தாக்கி அவரது செல்போனை பறித்து ஜிபே மூலம் 800 ரூபாயை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர். பின்னர் செல்போனை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த ராமர் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் ராமர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த வசந்தகுமார்(18), முத்துமாரியம்மன் நகர் லிங்கம்(21) மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: