திறக்கப்பட்ட மாயனூர் தடுப்பணை ரூ1.84 கோடி மதிப்பீட்டில் மேட்டு மருதூர் ஆராஅமுதீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணி

குளித்தலை, டிச.15: ரூ1.84 கோடி மதிப்பீட்டில் மேட்டு மருதூர் ஆராஅமுதீஸ்வரர் கோயில் புனரமைப்பு பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மேட்டு மருதூர் சுமார் 1450 ஆண்டுகள் பழமை வாய்ந்த உடைய நாதர் என்கின்ற ஆரா அமுதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக் கோயில் கட்டுமானம் சிற்பங்களின் படிமவியலின் அடிப்படையில் இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதுகின்றனர். பல்லவர்களுக்கு பிறகு சோழர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

கதவு நிலை கலில் உள்ள ராஜ ராஜ சோழன் 1ன் 21 வரி கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் பின்புற சுவற்றில் உள்ள ராஜராஜன் 2 கல்வெட்டுகள் சோழர்களின் பங்களிப்பை நிரூபிக்கின்றது. ராஜராஜன் 1ன் கல்வெட்டு ராஜராஜனை சாலை கல மறுத்த கோபி ராஜ ராஜ கேசரி என்று குறிப்பிடுகின்றது. இதை கேரளத்தின் விளிஞ்சம் கோட்டை மற்றும் காந்தளூர் சாலையை அளித்ததன் காரணமாக கொடுக்கப்பட்ட மெய்க்கியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ராஜராஜன் 1ன் கல்வெட்டின் படி சோழர் காலத்தில் மீய்கோட்டு நாட்டு மதான மருதூர் தற்போது இவ்வூர் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்று அழைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இறைவன் நாக பன்னீஸ்வரத்து மகாதேவர் மற்றும் ஆரவமிதீஸ்வரர் என அழைக்கப்பட்டு இருக்கின்றார் மேலும் அக்கல்வெட்டு சூரிய கிரகணத்தன்று நுந்தா விளக்கு எரிக்க இக்கோவிலுக்கு குடையாக அளிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த கோயிலை புணரமைப்பு செய்து புதுப்பிக்கப்பட வேண்டும் என பக்தர்கள், கிராம பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில்1450ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைப்பு செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இக்கோவில் 1.84 கோடி மதிப்பில் திருப்பணி செய்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திட்டப்பணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று பாலாளையம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு ஹோமம் பூஜைகள் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள், ஆய்வாளர் மற்றும் கிராம பொதுமக்கள் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: