மாவட்ட நிர்வாகம் தகவல் பாலாலயம் நடைபெற்றது தேர்தல் ஆணைய செயலியில் 91.20% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்

கரூர், டிச.15: இந்திய தேர்தல் ஆணைய செயலியில் 91.20% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்ற பணி நிறைவுவடைந்துள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுக்கு பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4.11.2025 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடு வீடாக சென்று வழங்கி, வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று வருகின்றனர். இதில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 2 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை வீட்டில் இருந்து வரும் விவரம் அறிந்த எந்த ஒரு குடும்ப உறுப்பினரும் அந்த வீட்டில் இருந்து வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய அனைத்து விண்ணப்ப படிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களை ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும்.

இதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவார்கள். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும்போது எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. மேலும் வாக்காளர்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரி பார்த்து இப்பணிக்காக வடிவமைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்த பின்னர் உதவி வாக்கு பதிவு அலுவலர்கள் அதனை சரி பார்ப்பார்கள்.மேலும் வாக்காளர்கள் தங்களுக்கான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வரை கணக்கெடுப்பு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் பெற்று வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதனடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் படிவங்களை சமர்ப்பிக்கும் போது என்னால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் என் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.

தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டனைக்கு உரியது என்பதை அறிவேன் என்ற உறுதிமொழியும் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் மூலம் பெறப்படும் கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் டிஜிட்டல் வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துருந்தனர்.

வாக்காளர் பதிவு அலுவலர் அந்த படிவங்கள் மீது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடு வீடாக சென்று வழங்கி, வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 91.20 % நிறைவடைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் 8,98,362 வாக்காளர்கள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வழங்கப்பட்டு திறும்பப் பெற நேற்று கடைசி நாளாகும். கரூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகின்றன 19ம் தேதி வெளியிடப்படும். அதறக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் இளம் வாக்காளர்கள்,வாக்குரிமை பெற படிவம் 6ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம். வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் வருவாய் துறையினர், கூட்டுறவு துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இப்பணியில் 700 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

Related Stories: