சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணான தண்ணீர்

ஓமலூர், டிச.15: ஓமலூர் அருகே வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் ஆத்தூர், நரசிங்கபுரத்திற்கு செல்லும் தரைமட்ட தண்ணீர் சேமிப்பு தொட்டி உள்ளது. இங்கு தண்ணீரை சேமித்து, மெகா மின் மோட்டார்கள் மூலம் ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக கருப்பூர் பவர் ஹவுசில் இருந்து 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீர் தொட்டி மின் மோட்டார்களுக்கான மின்சாரம், நேற்று திடீரென தடையானது. இதனால், ஜம்பில் இருந்த மின் மோட்டார் இயங்கவில்லை. இதனால் மேட்டூரில் இருந்து வந்த லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர், தொட்டி முழுமையாக நிரம்பி வெளியேறியது. சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து கருப்பூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், மின் வாரிய அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து, ஜம்பிற்கான மின்சாரத்தை வழங்கினர். அதற்குள் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடி வீணானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: