கொள்ளிடம் பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆய்வு

கொள்ளிடம், டிச. 15: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022ம் ஆண்டு தொடங்கப்ட்டு நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவற்றவர்களுக்கு அடிப்படை கல்வி அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இக்கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு சுமார் 2,500 முழுமையாக எழுத்தறிவற்றவர்களை கண்டறிந்து 100 மையங்களில் இத்திட்டமானது செயல்பட்டு வந்தது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதுதல் மற்றும் வாசித்தல், கணிதத்தில் அடிப்படை திறன்கள் ஆகியவை கற்பிக்கப்பட்டது. இம் மையங்களில் பயின்று வந்த கற்போர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின்படி தேர்வு நேற்று நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும்100 மையங்களைச் சேர்ந்த சுமார் 2,500 தன்னார்வலர்கள் இத் தேர்வு எழுதினர். இத்தேர்வு மையத்தினை வட்டார கல்வி அலுவலர் விமல்ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அப்போது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கூறுகையில், 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இத்திட்டத்தின் மூலம் எழுத மற்றும் படிக்க கற்றுள்ளனர். மேலும் அவர்கள் வாழ்வியல் திறன்கள் சிறப்பு அடைந்துள்ளது. அவர்களுக்கு ஏ.டி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுப்பது, வங்கிகளில் காசோலை பூர்த்தி செய்வது,நேரம் பார்ப்பது செய்தித்தாள் வாசிப்பது போன்ற அடிப்படை திறன்களை கற்றுள்ளனர். எடமணல் மையத்தில் முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியர் சுசிலா, கண்காணிப்பாளர்களாக தன்னார்வலர்கள்,பவி, விஜயமாலா மற்றும் ரேகா ஆகியோர் ஈடுபட்டனர். இத்தேர்வு நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் அபூர்வராணி, பாக்யலெட்சுமி மற்றும் உமா சங்கரி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

மொபைல் சார்ஜர் ஒரிஜினலா
மொபைல் போன் சார்ஜர் அதிகமாக சூடாகுவது ஒரு பொதுவான பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு ஆபத்தான எச்சரிக்கையாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, சந்தையில் போலியான மற்றும் தரமற்ற சார்ஜர்கள் நிறைந்துள்ளன, அவை தொலைபேசியின் பேட்டரியை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தீ மற்றும் மின்சார அதிர்ச்சியின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. அதிகரித்துவரும் இந்த ஆபத்தை கருத்தில்கொண்டு, பியூரே ஆப் இண்டியன் ஸ்டாண்டர்ட்ஸ் BIS CARE ஆப்-ஐ மிகவும் பயனுள்ள முறையில் உருவாக்கியுள்ளது. இது, உங்கள் சார்ஜர் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை உடனடியாக கூறுகிறது.

போன் சார்ஜர் ஒரிஜினலா அல்லது போலியா என்பதை எப்படி அறிவது?
மக்கள் தங்கள் எலக்ட்ரிக் டிவைஸ்களான சார்ஜர்கள், பவர் பேங்குகள், எல்இடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் உண்மையான தரத்தை சரிபார்க்க உதவும் வகையில் BIS CARE ஆப்-ஐ உருவாக்கியுள்ளது. ஆப்பில் சார்ஜரின் ISI மார்க் மற்றும் R-எண்ணை என்டர் செய்ய வேண்டும். இதன்மூலம், சில நொடிகளுக்குள் இந்த தயாரிப்பானது அரசாங்க பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்கிறதா? இல்லையா? என்பதை அது தெரிவிக்கும். போலி தயாரிப்புகளால் ஏற்படும் விபத்துகளிலிருந்து மக்களை பாதுகாப்பதே இந்த ஆப்பின் நோக்கமாகும்.

போலி சார்ஜர்களால் தீ மற்றும் ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம். போன் பேட்டரிகளுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும். உங்கள் சார்ஜர் அதிக வெப்பமடைந்தால், எரியும் வாசனையை வெளியிட்டால் அல்லது மீண்டும் மீண்டும் துண்டிக்கப்பட்டால், அது பாதுகாப்பற்றது என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும். உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். போலி தயாரிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, புகாரை பதிவு செய்யும் விருப்பமும் ஆப்-பிலேயே உள்ளது. போலி சார்ஜர்களை பயன்படுத்துவதை நிறுத்துவது முதல் மற்றும் மிக முக்கியமான படி என்று அரசாங்கம் கூறுகிறது. BIS CARE ஆப்-ஐ பயன்படுத்துவதன் மூலம், மக்கள் தங்களது போன்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், வீட்டில் தீ மற்றும் எலக்ட்ரிக் ஷாக் போன்ற பெரிய விபத்துகளையும் தவிர்க்கலாம்.

Related Stories: