கந்தர்வகோட்டை, டிச. 14: கட்டணமில்லா பேருந்துகள் கொடுத்து பெண்கள் வாழ்வை வளர்ச்சி அடைய வைத்தவர் முதல்வர் என்றுகந்தர்வக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் பெருமிதமாக பேசினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரில் உள்ள வெள்ளை முனியன் கோவில் திடலில் பொதுக்கூட்டம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மங்கள கோவில் பரமசிவம் வரவேற்றார்.
திமுக கொள்கைபரப்பு செயலாளர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வி பணிகள் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி பேசினார். மேலும் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், உலகத்தில் உள்ள 207 நாடுகளில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது. பெண்களை பேருந்து படிகளில் ஏறி வாழ்வில் முன்னேறி செல்ல கட்டணமில்லா பேருந்துகள் கொடுத்து பெண்கள் வாழ்வில் வளரச்சி அடைய வைத்தார். அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்கி கவுரவித்தார். அந்நிய முதலீட்டை தமிழகத்தில் அதிக அளவில் ஈட்டியுள்ளார். தமிழக இளைஞர்கள் பயன்பெற திறன் பயிற்சி அளிந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேன்மைப்படுத்தி உள்ளார். தமிழகத்தில் மத கலவரம் வராமல் இரும்பு கரம் கொண்டு அடக்குவார். வரும் காலத்தில் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்க திட்டம் பரிசிலனை நிலையில் இருப்பதாக கூறினார். மோடியின் பொய்யான பிரசாரம் தமிழகத்தில் எடுபடாது என்றார்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், கவிதை பித்தன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகம், கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழாய்யா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் நமச்சிவாயம், அலகு பிரகாஷ், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன், மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர் தவசிமணி, மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கலையரசன் நன்றி கூறினார்.
