கிருஷ்ணகிரி, டிச.15: நல்லம்பள்ளி அருகே அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பைக்கில் ராயக்கோட்டை-ஓசூர் வழியாக தொண்டமெட்டரை என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த மனோஜ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவலறிந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
