தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு

போச்சம்பள்ளி, டிச.15: ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்ட 2வது மாநாடு, வேலம்பட்டி அடுத்த என்.தட்டக்கல் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். முருகன், சின்னராஜ், பெரியசாமி, மகாலிங்கம், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னை விவசாய சங்க மாநில தலைவர் மதுசூதனன், மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட தென்னை விவசாய சங்க செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் முருகேஷ், மாவட்ட பொருளாளர்கள் ராஜூ, கடல்வேந்தன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக, தேங்காய் எண்ணெயை மானிய விலையில் விநியோகம் செய்ய வேண்டும். தென்னை சார்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும். வன விலங்குகளிலிருந்து விளை நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து, வன விலங்குளால் பாதித்த விளை நிலங்களை இன்சூரன்சுடன் இணைத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சக்தி, மாதலிங்கம், வஜ்ஜிரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: