மும்பை: பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ரிதேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சில காலத்தில் விவாகரத்தில் முடிந்தது. இதன் பிறகு டெல்லியைச் சேர்ந்த அடில் கான் என்ற நபரை ராக்கி சாவந்த் இரண்டாம் திருமணம் செய்தார். ராக்கி சாவந்த் தன்னை பணத்திற்காக திருமணம் செய்ததாகவும், அடில் கான் தன்னை புகழுக்காக திருமணம் செய்ததாகவும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர். பிறகு பிரிந்தனர். தற்போது ராக்கி சாவந்த் பாகிஸ்தானை சேர்ந்த நடிகரும், தொழிலதிபருமான தோதி கான் என்பவரை 3வது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய ராக்கி சாவந்த், ‘‘என்னை திருமணம் செய்து கொள்ள பலர் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். என் முந்தைய திருமணங்களில் நான் கொடுமைபடுத்தப்பட்டது பாகிஸ்தான் மக்களுக்கு புரிந்திருக்கிறது. நான் பாகிஸ்தான் சென்றபோது அதை தெரிந்து கொண்டேன். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பலரும் ஒருவரையொருவர் திருமணம் செய்துள்ளனர். எங்களின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி பாகிஸ்தானில் நடக்கும். இந்தியாவில் வரவேற்பு நடைபெறும். ஸ்விட்சர்லாந்து அல்லது நெதர்லாந்தில் தேனிலவை கொண்டாட இருக்கிறேன். துபாயில் செட்டிலாக இருக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.