×

நெவர் எஸ்கேப் விமர்சனம்

திரையரங்கு ஒன்றில் தொடர்ந்து அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக பயப்படும் ஊர் மக்கள், அந்தப் பக்கம் நடந்து செல்வதற்குக்கூட பயப்படுகின்றனர். அவர்களின் பயத்தைப் போக்கி, திரையரங்கிற்குள் நடப்பதாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் பொய் என்று நிரூபிக்க, பிரபல யூடியூப் சேனல் குழுவினர் திரையரங்கிற்குள் செல்கின்றனர். அப்போது போலீசிடம் இருந்து தப்பித்து ஓடி வரும் சிலருக்கு திரையரங்க உரிமையாளர் ராபர்ட் டிக்கெட் கிழித்துக் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்.

தியேட்டருக்குள் சென்ற அவர்கள், சில நிமிடங்களில் அங்கு ஏதோ சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதை உணர்ந்து பீதியடைகின்றனர். எப்படியாவது வெளியே தப்பித்துச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அவர்கள் தப்பித்தார்களா? திரையரங்கிற்குள் இருக்கும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன என்பது மீதி கதை. படம் தொடங்கும்போது சில வழக்கமான காட்சிகள் இடம்பெற்றாலும், திரையரங்கிற்குள் நுழைந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது.

இடைவேளை காட்சி பரபரப்பாக இருக்கிறது. கதையின் எதிர்மறை நாயகனாக வரும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், தன் கேரக்டரைப் புரிந்துகொண்டு, வித்தியாசமான கெட்டப்பில் நடித்து மிரட்டியுள்ளார். சைக்கோ கில்லர் கேரக்டருக்கு அவர் சரியான தேர்வு. மற்ற கேரக்டர்களில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி உள்பட புதுமுகங்கள் நடித்துள்ளனர். டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பேய் படங்களின் பாணியில் இருந்து சற்று விலகி, ஹாரர் திரில்லர் கதையை எழுதி டி ஸ்ரீ அரவிந்த் தேவராஜ் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சஷ்டி பிரனேஷ், இசை அமைப்பாளர் சரண் குமார் ஆகியோர், கதையின் நகர்வுக்கு உதவியுள்ளனர். பின்னணி இசையில் சரண் குமார் பயப்பட வைக்கிறார். திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

The post நெவர் எஸ்கேப் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : YouTube ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சாமானியன் விமர்சனம்