×

ரிஷபம்

ரிஷபம்: சனி, குரு, கேது மூவரின் அமைப்பு காரணமாக அலைச்சல், அதிருப்திகள் இருக்கும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அரசாங்க விஷயங்கள் அலைச்சலுக்கு பிறகு கூடி வரும். வண்டி வகையில் செலவுகள் உண்டாகும். காலியாக இருக்கும் ஃபிளாட்டிற்கு புதிய வாடகைதாரர்கள் வருவார்கள். சுக்கிரன் வக்கிரமாக இருப்பதால் பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். கணவன், மனைவி இடையே சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும்.உத்தியோகத்தில் நிறைகுறைகள் இருக்கும். வேலைச்சுமை, பயணங்கள், அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகரை வணங்குங்கள். அண்டை வீட்டார்களுக்கு பால் பாயாசம் கொடுக்கலாம்.

Tags :
× RELATED ரிஷபம்