×

விருச்சிகம்

விருச்சிகம்: ஏழாம் இடத்தில் சுக்கிரன், சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம் கவனம் தேவை. கணவன், மனைவி இடையே விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை மீட்பீர்கள். சகோதர உறவுகளால் செலவுகள், அலைச்சல் இருக்கும். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் அருளால் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாற்றல் பெற்று சொந்த ஊருக்கு வருவார்கள். அதனால் மன உளைச்சல் நீங்கும்.

பரிகாரம்: முருகப்பெருமானை நினைத்து கந்தசஷ்டி கவசம் சொல்லுங்கள். ஆதரவற்ற முதியவர்களுக்கு பழவகைகளை கொடுக்கலாம்.

Tags : Scorpio ,
× RELATED விருச்சிகம்