கடகம்

சனி 6-ல் தொடர்வதால் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கலில் நின்றுபோன பணம் கைக்கு வரும். 8-ல் சூரியன், புதன், கேது மூவரும் இருப்பதால் வாக்குவாதம், வாக்குறுதி இரண்டையும் தவிர்க்கவும். மகள் திருமண விஷயமாக  நல்ல தகவல் வரும். தந்தையிடம் வீண்பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும். பயணத்தின்போது கவனம் தேவை. கைப்பை, செல்போன், உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது. சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். தொழிலில் ஏற்றம் உண்டு. வேலையாட்கள் பிரச்னைகள் தீரும். எதிர்பார்த்த காண்ட்ராக்ட், டெண்டர் கைக்கு வரும்.

பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபடலாம். துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உதவலாம்.

× RELATED கடகம்