கன்னி

முயற்சிகள், விருப்பங்கள் கூடிவரும் யோகம் உள்ளது. சனி, கேது 3ல் இருப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்க முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வீர்கள். புதன், சுக்கிரன் இருவரின் பார்வை காரணமாக வரவேண்டிய தொகை கைக்கு வரும். அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். கன்னிப் பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்துடன் இஷ்ட தெய்வ ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். வழக்கு சம்மந்தமாக வெற்றி செய்தி கிடைக்கும்.

பரிகாரம்: உத்தர கோச மங்கையில் அருட்பாலிக்கும், மங்கள நாதர், மரகத நடராஜரை தரிசிக்கலாம். ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களுக்கு உதவலாம்.

× RELATED கன்னி