×

கடகம்

தடைகளைக் கண்டு தளராமல், பீனிக்ஸ் பறவைபோல ஓயாமல் போராடி உயிர்த்தெழும் குணம் கொண்ட நீங்கள், கடின உழைப்பாளிகள். புதன் சாதகமான வீடு
களில் இந்த மாதம் முழுக்க செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட, வாங்க, வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. உங்களுடைய ராசிக்கு 12ம் வீட்டிலேயும் சூரியன் நுழைந்திருப்பதால் இந்த மாதம் முழுக்க செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்களும் இருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளையும் நீங்கள்தான் எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலையிலும் சிக்கிக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.  குரு 4ல் நிற்பதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

6ல் சனி வலுவாக இருப்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பால்ய நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உயர்ரக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். செவ்வாயும், கேதுவும் 7ம் வீட்டில் சேர்ந்திருப்பதால் சகோதர வகையில் மனக்கசப்புகள் தொடரும். அவர்களை அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். மாணவர்களே! கல்விப் பிரிவில் தேர்ந்தெடுப்பதில் குழப்பங்கள் வேண்டாம். பெற்றோர், நண்பர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பங்குதாரர்கள், வேலையாட்களால் ஏமாற்றங்களும், அலைக்கழிப்புகளும் இருக்கும். ஊனமுற்றவர்களை வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீசப் பொருட்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். சக ஊழியர்களுடன் ஈகோவாகப் பேச வேண்டாம். நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விவசாயிகளே! மரப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கரும்பு, வெண்டைக் காய், கீரை வகைகளால் லாபம் வரும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் மாதமிது.

ராசியான தேதிகள்:

ஜூன் 20, 21, 22, 23, 28, 29, 30 மற்றும் ஜூலை 8, 9, 10, 16.

சந்திராஷ்டம தினங்கள்:

ஜூலை 2ம் தேதி காலை 10.06 மணி முதல் 3, 4ம் தேதி இரவு 8.15 மணி வரை.

பரிகாரம்:

நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணிக்கு உதவுங்கள்.

Tags :
× RELATED மேஷம்