×

மகரம்

மகரம்: சனி, குரு இருவரின் சஞ்சாரம் காரணமாக சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து வர வேண்டிய நகை, பணம் கைக்கு வரும். வழக்கு சம்மந்தமாக சமாதான தீர்வுக்கு அமைப்பு உள்ளது. கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது மிகவும் அவசியமாகும். செவ்வாயின் பார்வை காரணமாக வீடு கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலைகள் இருக்கும். சம்பள உயர்வு பற்றி தகவல் வரும். பிள்ளைகளின் எதிர்காலம், வேலை, திருமணம் குறித்து கவலைப்படுவீர்கள்.

பரிகாரம்: பாண்டிச்சேரி, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு உதவலாம்.

Tags :
× RELATED மகரம்