மீனம்

ராசி நாதன் குருவின் பார்வை அமோகமாக இருப்பதால் கையில் காசு பணம் புரளும். அரசாங்கத்தில் இருந்து வர வேண்டிய அனுமதி கடிதம், சான்றிதழ் கைக்கு வரும். எதிர் பார்த்த சுப செய்தி திங்கட் கிழமை வரும். செவ்வாய் அருளால் மகன், மகளுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும். ராகு, புதன்  இருவரின் அமைப்பு காரணமாக வீண் அலைச்சல், எதிர் பாராத  அவசர பயணங்கள் இருக்கும். வயிற் சம்மந்தமான உபாதைகள்  வரவாய்ப்புள்ளது. புது வீடுமாற இடம் பார்த்தவர்களுக்கு நல்ல வசதியான ஃபிளாட் அமையும்.
பரிகாரம்: புதன்கிழமை துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழமாலை சாத்தி வணங்கலாம். ஏழை மாணவர் தேவை அறிந்து வேண்டியதை செய்யலாம்.

Tags :
× RELATED மீனம்