மும்பை: 66 வயது நடிகருக்கு இளம் நடிகை முத்தம் தரும் காட்சிகள் 30 முறை இடம்பெற்ற வெப்சீரிஸை ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். த நைட் மேனேஜர் என்ற ஆங்கில வெப்சீரிஸ், இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இது சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தியில் அனில் கபூர், ஆதித்ய ராய் கபூர், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸில் 66 வயதான அனில் கபூருக்கு ஜோடியாக 30 வயதான சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இவர், பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில் த நைட் மேனேஜர் வெப்சீரிஸில் பலமுறை அனில் கபூருக்கு சோபிதா லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.